பட்டா வழங்கக்கோரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் முற்றுகை

பட்டா வழங்கக்கோரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-06-27 20:58 GMT

ஆத்தூர்:

வன உரிமை சட்டம் 2006-ன் படி மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க கோரியும். பட்டா வழங்காமல் காலதாமதம் செய்யும் உதவி கலெக்டர் மற்றும் மாவட்ட வன அலுவலரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது. மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் டெல்லி பாபு தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு முற்றுகை போராட்டம் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பட்டா வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர் உதவி கலெக்டர் சரண்யாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்