ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளில் பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளில் பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளில் பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் உயர்கல்வி குறித்து மாவட்ட கல்வி அலுவலர் கணேச மூர்த்தி, மக்கள் மறுமலர்ச்சி தடம் திருவண்ணாமலை மாவட்ட தலைவரான ஐகோர்ட்டு வழக்கறிஞர் கணபதி, அரசு பள்ளி ஆசிரியர் அருளப்பன், ராணிப்பேட்டையை சேர்ந்த சுரேந்தர், மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் பேசினார்.
இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முடிவில் சேத்துப்பட்டு அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி பட்டதாரி போதக காப்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மக்கள் மறுமலர்ச்சி தடம் ஆகியவை இணைந்து செய்திருந்தன.