அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் பஸ்
அய்யம்பேட்டை அருகே அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் பஸ்சின் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனா். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கொடுத்த தகவலின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
அய்யம்பேட்டை, டிச.4-
அய்யம்பேட்டை அருகே அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் பஸ்சின் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனா். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கொடுத்த தகவலின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் பஸ்
கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலை அதிக வளைவுகள் கொண்ட சாலையாகும். இந்தநிலையில் பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நேற்று பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு அரசு நிகழ்ச்சி மற்றும் ஆய்வு பணிகளில் கலந்து கொண்டு அய்யம்பேட்டையிலிருந்து பாபநாசம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.அவருடைய கார் சரபோஜிராஜபுரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கும்பகோணத்திலிருந்து தஞ்சை நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. இந்த பஸ்சுக்கு பின்புறம் அதிவேகமாக வந்த ஒரு தனியார் பஸ் அரசு பஸ்சை முந்தி கொண்டு உரசுவது போல் சென்றது.
வழக்குப்பதிவு
இதை பார்த்த ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.வும், அவருடன் வந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அய்யம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்ற போலீசார் தனியார் பஸ்சை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குத்தாலத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.