உயர்தர உள்ளூர் ரக பயிர் கண்காட்சி

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் உயர்தர உள்ளூர் ரக பயிர் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடக்கிறது.

Update: 2023-02-21 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உயர்தர உள்ளூர் ரக பயிர்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார விவசாயிகளும் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு உயர்தர ரகங்களை காட்சிப்படுத்தலாம். வேளாண் கல்லூரி விஞ்ஞானிகள் இந்த கண்காட்சியின் மூலம் வீரியம் மிக்க குணங்களை கொண்ட ரகங்களை கண்டறிந்து புதிய ரகங்களை உருவாக்க ஏதுவாக இருக்கும்.

எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களிடம் உள்ள உயர்தர உள்ளுர் ரகங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தவும், கண்காட்சியில் கலந்து கொள்ளவும், விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்