முன்ஜாமீன் கோரியவர்களின் மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு

முன்ஜாமீன் கோரியவர்களின் மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2022-06-24 17:21 GMT


மதுரையை சேர்ந்த அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ஹிஜாப் பிரச்சினையில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கண்டித்து சமீபத்தில் மதுரை கோரிப்பாளையம் தர்கா முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற ரகுமத்துல்லா என்பவர் ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் மத்திய அரசை மிரட்டும் விதமாக பேசினார். இந்த தீர்ப்பை எதிர்த்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. அதன் அடிப்படையிலேயே கோரிப் பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம். எனவே எங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் நீதிபதி முரளிசங்கர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.அப்போது மனுதாரர் தரப்பில், இனி இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என தனித்தனியாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதி, மனுதாரர்கள் கூடுதல் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்