வாலிபர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவு
பல்வேறு வழக்குகள் தொடர்பாக முன்ஜாமீன் பெற்ற வாலிபர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.;
ஓசூர்:
ஓசூர் அய்யாசாமிபிள்ளை தெருவை சேர்ந்தவர் சாம் என்ற சாம்ராட் (வயது28). இவரை, பல்வேறு வழக்குகள் தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் கைது செய்திருந்தனர். இதையடுத்து அவருக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் கடந்த மாதம் 21-ந்தேதி முன்ஜாமீன் வழங்கியது. ஆனால் தொடர்ந்து, சாம்ராட் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதுகுறித்து கோர்ட் கிளார்க் சிக்கந்தர்பாஷா என்பவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் தலைமறைவான சாம்ராட்டை தேடி வருகின்றனர்.