வழக்குகள் மின்னணு முறையில் பதிவு செய்யும் உதவி மையங்கள்

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் மின்னணு முறையில் பதிவு செய்யும் உதவி மையங்கள்

Update: 2022-07-07 13:43 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் மின்னணு முறையில் பதிவு செய்யும் உதவி மையங்கள் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜமுனா தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இருசன்பூங்குழலி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 2 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது அனைத்து பதிவுகளும் மின்னணு முறையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதால் வழக்குகள் மின்னணு முறையில் பதிவு செய்வதற்காக இந்த உதவி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

மேலும் இதன் மூலம் வழக்குகளுக்காக செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணத்தையும் செலுத்தலாம். தொடர்ந்து விரைவில் தாலுகாவில் உள்ள நீதிமன்றங்களிலும் இந்த உதவி மையம் தொடங்கப்பட உள்ளது என்றார்.

விழாவில் நீதிபதி, மாஜிஸ்திரேட்டுகள், வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்