ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-02-16 18:45 GMT

கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். .பேரணியானது கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்டு முக்கிய சாலை வழியாக சென்று வந்தது. நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இலவச கண் சிகிச்சை முகாம்

Tags:    

மேலும் செய்திகள்