சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி மாநாடு இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு தொடக்கமாக அமையும்-அமைச்சர் மூர்த்தி பேச்சு

சேலத்தில் நடைபெறவுள்ள தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கான தொடக்கமாகவும் அமையும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

Update: 2023-10-16 00:50 GMT

வாடிப்பட்டி, 

.

ஆலோசனை கூட்டம்

மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டியில் பேரூர் இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் தனியார் மகாலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,

சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞர் அணி மாநில மாநாடு இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையிலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கான தொடக்கமாகவும் அமையும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்றுவதற்கு நமது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இளைஞர் அணி மாநாடு

இந்த நல்ல ஆட்சிக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி நடைபெறும் இளைஞர் அணி மாநில மாநாட்டில் தமிழ்நாட்டிலேயே அதிகமான இளைஞர்கள், மதுரை வடக்கு மாவட்டத்தில் இருந்து வந்திருக்கிறார்கள் என்ற பெருமை கிடைக்கும் வகையில் நிர்வாகிகள் உழைக்கவேண்டும் என்றும் பேரூர், ஒன்றியம், நகரம் என தனித்தனியாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் அடுத்த கட்டமாக தொகுதி கூட்டமாக நடத்தப்படும். அந்த கூட்டத்தில் சேலம் மாநாட்டில் பங்கேற்க உள்ள இளைஞர் அணியினர் இறுதி

செய்யப்பட்டு மாநாட்டில் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., சோழவந்தான் தொகுதி பொறுப்பாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் பால்பாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் சி.புதூர் சேகர், வக்கீல் கார்த்திக், ஜெயகாந்தன், கோகுல்நாத், மருது பாண்டியன், இளைஞர் அணி நிர்வாகிகள் வெற்றி செல்வன், வரதராஜா, குமரேசன், இளங்கோவன், பேரூர் இளைஞர் அணி வினோத், பேரூர் நிர்வாகிகள் முரளி அரவிந்தன், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்