கடலூரில் நடந்த கோர்ட்டு பணிக்கான தேர்வை 8,969 பேர் எழுதினர்

கடலூரில் நடந்த கோர்ட்டு பணிக்கான தேர்வை 8,969 பேர் எழுதினர்.

Update: 2022-10-16 18:45 GMT

தமிழகம் முழுவதும் கோர்ட்டில் காலியாக உள்ள நகல் பரிசோதகர், நகல் வாசிப்பவர், இளநிலை கட்டளை நிறைவேற்றுபவர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுபவர் ஆகிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. இதில் கடலூர், நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த தேர்வை எழுதுவதற்காக 12 ஆயிரத்து 118 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்கள் தேர்வு எழுதுவதற்காக கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் கல்லூரி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சி.கே.பள்ளி உள்பட 14 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வை எழுதுவதற்காக தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு வந்திருந்தனர்.

8,969 பேர் எழுதினர்

தொடர்ந்து அவர்களுக்கு காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு மதியம் 12 மணி வரை நடந்தது. இந்த தேர்வை 8,969 பேர் எழுதினர். 3 ஆயிரத்து 149 பேர் தேர்வு எழுத வரவில்லை. முன்னதாக தேர்வு மையங்களை மாவட்ட நீதிபதி ஜவகர் தலைமையில் தலா 2 நீதிபதிகள் வீதம் 28 நீதிபதிகள் கண்காணித்தனர். நேற்று முன்தினம் டிரைவர் பணிக்கான தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்