நீலகிரியில் கனமழை; மசினகுடி தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
கிளென் மார்கன் அணையில் இருந்த தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஊட்டி அருகே உள்ள கிளென் மார்கன் அணையானது முழு கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து 1,500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மாயார் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மசினகுடி தரைப்பாலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு அதிக அளவிலான தண்ணீர் செல்வதால் வாகனங்கள் செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி இருந்த வாகன ஓட்டிகள், சுற்றுலா வழிகாட்டிகள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் ஆகியோருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.