இடி-மின்னலுடன் பலத்த மழை
வள்ளிமலையில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இடி-மின்னலுடன் பலத்த மழை
வேலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல்பகல் நேரங்களில் வீடுகளில் முடங்கி வருகின்றனர்.
வருகிற 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று மாலை திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வள்ளிமலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இதனால் பள்ளமான பகுதிகளில் தண்ணீர்தேங்கியது. சாலைகளில் தணணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வள்ளிமலை- பொன்னை சாலையில் சாலை புதுப்பிக்கும் பணிக்காக ஆங்காங்கே தரை பாலும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் பக்கவாட்டில் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக வாகனங்கள் திரும்பி விடப்பட்டுள்ளது. அந்த தற்காலிக மண் சாலையில் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.