வரும் 30 மற்றும் 31 -ம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை...!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுமாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது

Update: 2023-12-28 13:54 GMT

சென்னை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுமாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் இன்று முதல் 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிலும் தென்மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 30 மற்றும் 31ம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்