விருதுநகரில் நேற்று மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 5 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 7 மணி வரை நீடித்தது. இதனால் நகரில் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் குறிப்பாக பழைய பஸ் நிலையத்தை சுற்றி உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் பஸ் நிலையத்தில் பஸ்கள் வருவதற்கும், வெளியேறுவதற்கும் சிரமம் ஏற்பட்ட நிலையில் பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாயினர். ஆதலால் பஸ்நிலையத்தை சுற்றியுள்ள சாலையில் முறையாக மழை நீர் வடிகால் அமைக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.