உளுந்தூர்பேட்டை பகுதியில் பலத்த மழை

உளுந்தூர்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது.

Update: 2023-09-17 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் வானத்தில் திடீரென கருமேகங்கள் திரண்டன. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் சுமார் 2 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான இடங்களில் குளம்போல் தேங்கி நின்றது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்றதையும் காணமுடிந்தது. பலத்த மழை பெய்ததால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லாமல் சீரான வேகத்தில் சென்றது. இதேபோல் உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்