பெரம்பலூரில் 3-வது நாளாக பலத்த மழை
பெரம்பலூரில் 3-வது நாளாக பலத்த மழை பெய்தது.
பெரம்பலூரில் நேற்று 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதில் மதியம் 2 மணியளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு பலத்த மழை பெய்தது. பின்னர் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் இரவில் ஏற்பட்ட குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- செட்டிகுளம்-55, பாடாலூர்-5, அகரம்சீகூர்-30, லெப்பைக்குடிகாடு-19, புதுவேட்டக்குடி-31, பெரம்பலூர்-25, எறையூர்-8, கிருஷ்ணாபுரம்-11, தழுதாழை-20, வி.களத்தூர்-18, வேப்பந்தட்டை-16.