முத்தையாபுரம் பகுதியில் பலத்த மழை

முத்தையாபுரம் பகுதியில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-11-03 18:45 GMT

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி பகுதியில் நேற்று மாலையில் அரை மணிநேரம் பலத்தமழை பெய்தது. தொடர்ந்து இரவு வரை சாரல் மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த மழையால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்