கோவில்பட்டி:
கோவில்பட்டியில் கடந்த சில தினங்களாக வெயில் வெளுத்து வாங்கியது. நேற்று மாலையில் மழை திடீரென பெய்யத்தொடங்கியது. அப்போது காற்றே இல்லாமல் விட்டு விட்டு பெய்தது.
பலத்த மழை காரணமாக ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீருடன் கழிவுநீர் கலந்து ரோடுகளில் ஓடியது. வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். நேற்று பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திடீரென பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த சூழ்நிலை இருந்தது.