ஜோலார்பேட்டை பகுதியில் பலத்த மழை

ஜோலார்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-08-24 17:24 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்தது. பின்னர் மாலை 3 மணியளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலை ஓரங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு குளிர்ச்சியான சூழலில் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்