சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை பெய்து வருகிறது.
சென்னை,
சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு பெய்து வருகிறது.
எழும்பூர், மயிலாப்பூர்,திருவல்லிக்கேணி, சிந்தாரிப்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், புரசைவாக்கம், அசோக்பில்லர், அயனாவரம், கிண்டி, தி.நகர், அடையாறு, சைதாப்பேட்டை
புறநகர் பகுதிகளான மேடவாக்கம் ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, திருவேற்காடும் காட்டுப்பாக்கம், கரையான்சாவடி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைபெய்து வருகிறது.