அருப்புக்கோட்டை பகுதிகளில் கனமழை

அருப்புக்கோட்டை பகுதிகளில் பெய்த கனமழையினால் மரம் முறிந்து சாலையில் விழுந்தது.;

Update:2023-09-28 02:01 IST

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை பகுதிகளில் பெய்த கனமழையினால் மரம் முறிந்து சாலையில் விழுந்தது.

கனமழை

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று காலையும் வழக்கம் போல் வெயில் அடித்தது.

இதையடுத்து மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்து கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் மாலை 6 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 7 மணி வரை பெய்தது. கனமழை காரணமாக காந்தி மைதானம், மதுரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து சென்றது.

மரம் முறிந்தது

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் கனமழை காரணமாக பந்தல்குடி சாலையில் ராமசாமிபுரம் அருகே மரம் முறிந்து சாலையில் விழுந்தது.

இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் தலைமையிலான போலீசார் முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்