3 மாவட்டத்தில் வெளுக்கும் மழை.. நிவாரண பொருட்கள் - வெளியான முக்கிய அறிவிப்பு

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-12-18 18:30 IST

நெல்லை,

தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் பெய்ய தொடங்கிய மழை நேற்று முழுவதும் கொட்டி தீர்த்தது. இரவிலும் அதி கனமழை பெய்தது. இன்னும் இரண்டு நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 73977 66651 வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ரொட்டி பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பால் பவுடர், உலர் பழங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்