நள்ளிரவில் பலத்த மழை: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர்
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு பலத்த மழை பெய்தது.
விழுப்புரம்,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக வடதமிழக மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென்தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் கனமழையும், பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பலத்த இடி மின்னலுடன் பெய்த கனமழையால் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மழை நீரில் கழிவு நீர் கலந்ததால் பேருந்து நிலையம் குட்டை போல் மாறியது.
பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் விழுப்புரத்தில் 22 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.