பென்னாகரம் பகுதிகளில் திடீர் கனமழை

Update: 2023-09-17 19:30 GMT

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. மாலை நேரத்தில் பென்னாகரம் பகுதிகளில் திடீரென கருமேகங்கள் திரண்டு திடீரென கனமழை பெய்தது. சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்