காஞ்சிபுரம் அருகே அரசு பஸ் மீது கனரக லாரி மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி
காஞ்சிபுரம் அருகே அரசு பஸ் மீது கனரக வாகனம் மோதி விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே அரசு பஸ் மீது கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்சில் பயணம் செய்த ரதி (31), புனிதா (51) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் 10 பேர் பலத்தகாயங்களுடன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி அரசு பஸ் செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.