கிணத்துக்கடவில் கடும் பனிமூட்டம்

கிணத்துக்கடவில் கடும் பனிமூட்டம்

Update: 2022-10-27 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலையில் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதியில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் கிணத்துக்கடவு வழியாக கோவை, பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் சென்ற பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்பட அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. மேலும் எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் நான்கு வழிச்சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் மெதுவாக இயக்கப்பட்டன. இந்த பனிமூட்டம் காலை 7.30 மணிக்கு விலகியது. அதன்பிறகு வாகன ஓட்டிகள் சிரமமின்றி கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் பயணம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்