சென்னையில் கட்டுமான தொழிலாளியின் உயிரை பறித்த ஹீட் ஸ்ட்ரோக்: வெயிலில் செல்வோரே உஷார்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கட்டுமான தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2024-05-05 05:34 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடதமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு 104 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இந்நிலையில் சென்னையில் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக உடல் பாதிக்கப்பட்ட சச்சின் என்பவர் உயிரிழந்துள்ளார். முன்னதாக அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக நேற்று கடும் வெயிலில் அவர் பணி செய்த போது கால் மரத்துப்போன உணர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த கட்டுமான தொழிலாளிக்கு கல்லீரல், கணையம், சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



Tags:    

மேலும் செய்திகள்