சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல்லில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-09-18 19:08 GMT

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாமக்கல் நகராட்சி சார்பில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகே தொடங்கிய ஊர்வலம் கோட்டை சாலை, பிரதான சாலை, பஸ் நிலையம் வழியாக பூங்கா சாலையில் நிறைவடைந்தது.

இதில் நகராட்சி துணை தலைவர் பூபதி, நகராட்சி பொறியாளர் சுகுமார், நகர்நல அலுவலர் பரிதாவாணி, சுகாதார அலுவலர் திருமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் தூய்மை குறித்த உறுதிமொழியை எடுத்து கொண்டனர். இதையொட்டி ஆங்காங்கே தூய்மை பணியும் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்