பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவர் ைகது
பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;
தாயில்பட்டி,
தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் வாகனசோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக சாக்குபையுடன் நடந்து சென்ற கோட்டையூரை சேர்ந்த கண்ணன் (வயது 48) என்பவரை சோதனை செய்தார். அப்போது அவரிடம் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட 20 கிலோ சரவெடிகள் இருந்தது தெரியவந்தது. வெடிகளை பறிமுதல் செய்த போலீசார், கண்ணனை கைது செய்தனர்.