எந்திரம் மூலம் வைக்கோல் கட்டும் பணி
எந்திரம் மூலம் வைக்கோல் கட்டும் பணி
நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளான சித்தமல்லி, பரப்பனாமேடு, மேலப்பூவனூர், காளாச்சேரி, ராயபுரம், ரிஷியூர், அனுமந்தபுரம், பெரம்பூர், வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 34 ஆயிரம் ஏக்கரில் குறுவை நடவுப் பணி நடந்து வருகிறது. விவசாயிகளில் சிலர் ஏற்கனவே 16,500 ஏக்கரில் கோடை நெல்சாகுபடி பணியை முடித்து குறுவை சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர். தற்போது கோடையில் நிலத்தடி நீரை மின் மோட்டாரில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் எந்திர அறுவடையை தொடங்கினர். தற்போது அறுவடை முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து எந்திரம் மூலம் வைக்கோல் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.