புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்

சீர்காழி நகராட்சியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Update: 2023-01-09 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சீர்காழி நகரில் உள்ள பொதுமக்கள் போகிபண்டிகை நாளில் குப்பைகளை கொளுத்தக்கூடாது. தங்கள் பகுதியில் வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் வெளியேற்றப்படும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தங்களின் வீடுகள் தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் மட்டுமே குப்பைகளை தர வேண்டும். மக்கள் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடி தூய்மையான நகராட்சியாக சீர்காழியை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்