அரூர் பகுதியில் வாகன தணிக்கையில் 73 வாகனங்களுக்கு ரூ.8¼ லட்சம் அபராதம்
அரூர் பகுதியில் வாகன தணிக்கையில் 73 வாகனங்களுக்கு ரூ.8¼ லட்சம் அபராதம்;
அரூர்:
அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். ஒரு மாதத்தில் 306 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது சரக்கு வாகனத்தில் ஆட்கள் ஏற்றி வந்தது. உரிய அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றி வண்டிகள், அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் உள்ளிட்ட 73 வாகனங்களுக்கு ரூ.5 லட்சத்து 21 ஆயிரம் அபராதம், ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் என மொத்தம் ரூ.8 லட்சத்து 37 ஆயிரம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பினார். முறையான ஆவணம் இல்லாத 23 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.