நடிகர் வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் தந்த ஹரிஸ் உள்பட இருவர் கைது

முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஹரிஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

Update: 2023-03-05 03:39 GMT

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பின் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் தலைமை விருந்தினராக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

ஆனால் வழங்கப்பட்ட பட்டங்கள் அனைத்தும் போலியான டாக்டர் பட்டம் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஏமாற்றுதல், மோசடி செய்தல், அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் , நடிகர் வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களுக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் இயக்குநரான ஹரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ஹரிஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில்,ஹரிஷ் உள்பட இருவரை ஆம்பூர் அருகே கைது செய்து ,    தனிப்படை  காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் ,.

Tags:    

மேலும் செய்திகள்