சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி - ரஜினிகாந்த் பேட்டி
தமிழிசை சவுந்தரராஜனை நிருபர்கள் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர் சந்திக்காமல் வேக வேகமாக காரில் ஏறிச் சென்றுவிட்டார்.;
மீனம்பாக்கம்,
ஆந்திர மாநில முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தனர்.
விமான நிலையத்தில் நிருபர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறும்போது, "சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விழா மிக சிறப்பாக நடைபெற்றது. நன்றி" என்றார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அமித்ஷா, தமிழிசை சவுந்தரராஜனை கடிந்து கொண்ட வீடியோ காட்சிகள் குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜனை நிருபர்கள் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர், நிருபர்களை சந்திக்காமல் வேக வேகமாக காரில் ஏறிச் சென்றுவிட்டார்.