தமிழிசை சவுந்தரராஜனுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி
தமிழிசை சவுந்தரராஜன் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்
சென்னை,
தெலுங்கானா மாநில கவர்னரும் புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
மேதகு தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்,
.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பொதுப்பணி சிறந்து, பூரண உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். என பதிவிட்டுள்ளார்.