அன்புச்சகோதரி தமிழிசை சவுந்தரராஜனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - ஓ.பன்னீர்செல்வம்
தமிழிசை சவுந்தரராஜனுக்கு பன்னீர்செல்வம் பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கூறியுள்ளார்
சென்னை,
தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர் பொறுப்பினை வகிப்பவருமான தமிழிசை சவுந்தரராஜனுக்கு பன்னீர்செல்வம் பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் பொறுப்பினை வகிப்பவருமான அன்புச்சகோதரி டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
அவர் தொடர்ந்து நாட்டுப் பணியாற்றிடும் வகையில், ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் இறைவன் அருள்வாராக.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.