விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
சேத்துப்பட்டு
விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
சேத்துப்பட்டு பேரூராட்சி ஆரணி சாலையில் உள்ள ெஜகவீர பஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதனையொட்டி காலையில் பஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேயர் மற்றும் மூலவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால அபிஷேகம் நடந்தது. பின்னர் ஜெக வீர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மூலவருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது காலையிலிருந்து பக்தர்கள் கடும் பனியை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி அனைவருக்கும் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தி சொற்பொழிவும் நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் கண்ணனூர், மதுரா பழம்பேட்டை, சேத்துப்பட்டு பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.