தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-17 19:25 GMT

தாயில்பட்டி,

தாயில்பட்டி அருகே உள்ள அருகே வெற்றிலையூரணி மேல தெருவை சேர்ந்தவர் ஜோதி (வயது 40). இவரது கணவர் காளிமுத்து (43). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகின்றனர். காளிமுத்து சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் காளிமுத்து அவர் வீட்டில் தூங்க சென்றார். பின்னர் மறுநாள் காலையில் ஜோதி வெகு நேரம் கதவைத் தட்டியும் காளிமுத்து திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவர் தூக்கில் இறந்த நிலையில் இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளிமுத்துவின் உடலை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்