தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
விருதுநகரில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது29). வேன் டிரைவரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மாரிச்செல்வம் தினசரி மது குடித்துவிட்டு வந்து மனைவி முனிய செல்வத்துடன் தகராறு செய்து வந்த நிலையில் அவரை குடும்பத்தார் கண்டித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாரிச்செல்வம் வீட்டில் நுழைந்து கதவை பூட்டி கொண்ட நிலையில் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாரிச்செல்வம் வீட்டினுள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாரிச்செல்வத்தின் தாயார் முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.