ஆவடியில் குற்ற வழக்குகளில் பறிமுதலான நகைகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு - கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்

ஆவடியில் குற்ற வழக்குகளில் பறிமுதலான நகைகள் உரியவர்களிடம் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்.

Update: 2022-09-25 08:30 GMT

ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து நகை, பணம், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 136 பவுன் நகை, 491 செல்போன்கள், ரூ.7 லட்சம் ஆகியவற்றை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று மதியம் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். போலீஸ் துணை கமிஷனர்கள் மகேஷ், மணிவண்ணன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்