நெகமம்
கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடுக்க வேண்டும், விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் ரகங்களை கைத்தறியில் உற்பத்தி செய்தது எனக்கூறி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கைத்தறி ரகங்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், நூல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெகமம் திருவள்ளுவர் திடல் பகுதியில் கைத்தறி நெசவாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெசவு தறி மற்றும் கை ராட்டையுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கலந்துகொண்டனர்.