மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி: அரசு கல்லூரி மாணவிகள் மாநில போட்டிக்கு தகுதி

மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் அரசு கல்லூரி மாணவிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்;

Update:2023-02-08 01:52 IST


மதுரையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் கண் பார்வையற்றோர் பிரிவில் கைப்பந்து இறுதி போட்டியில் தியாகராஜர் கல்லூரியும், மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி அணியும் மோதின. இதில் தியாகராஜர் கல்லூரி அணி வெற்றி பெற்றது. மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி அணி 2-ம் இடம் பிடித்தது. இந்த போட்டியில் முதல் இடம் பிடித்த அணியில் சிறப்பாக விளையாடிய 3 பேரும், 2-ம் இடம் பிடித்த அணியில் 3 பேர் என மொத்தம் 6 பேர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். அவ்வாறு தகுதி பெற்ற மாணவிகளை மீனாட்சி அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் பாராட்டினார். மேலும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பொதுபிரிவில் கால்பந்து போட்டியில் 3-ம் இடத்தையும் 1,500 மீட்டர் ஓட்டத்தில் பரமேஸ்வரி என்ற மாணவி 3-ம் இடத்தையும் பெற்றனர். போட்டியில் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த இந்த மாணவிகளை முதல்வர், ஆசிரியர்கள் என பலரும் பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்