மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

00 நாள் வேலை திட்ட அட்டை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-06-26 18:45 GMT


மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் லட்சுமி முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் ஜீவா, மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான நீல அட்டை வழங்காதவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். வேலை கேட்கும் அனைவருக்கும் வேலை வழங்கி முழு சம்பள தொகையான ரூ.294 வழங்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்ட அரசு ஆஸ்பத்திரி, சீர்காழி அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெறும் மருத்துவ முகாம்களில் முறையான சான்று வழங்கப்படாததால் மாற்றுத்திறனாளிகளுக்கான ரெயில் மற்றும் பஸ் பாஸ் கிடைப்பதில்லை. எனவே டாக்டர்கள் அரசு விதிமுறைகளை கடைப்பிடித்திட வழிவகை செய்ய வேண்டும். மாற்று திறனாளிகளுக்கான அரசு அறிவித்த பயணப்படி ரூ.2 ஆயிரத்து 500 அல்லது அரசு உதவித்தொகை ஆயிரத்து 500 வழங்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் தேவையான ஊழியர்களை உடனே நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் பாரதிராஜா, சொக்கலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்