மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கயத்தாறுயூனியன் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-21 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு நேற்று கயத்தாறு ஒன்றிய தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய துணைத்தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் சாலமன் ராஜ் முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்காமல் அனைத்து பஞ்சாயத்துகளிலும் தொடர்ச்சியாக 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். 4 மணி நேர வேலைக்கு முழு சம்பளம் ரூ.281 வழங்க வேண்டும். மாற்றுதிறனாளிகளை பணியிடங்களில் அவமரியாதை செய்யும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமம்) பானுவிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்