உலக கை கழுவும் தின விழா

ஜாகீர் வெங்கடாபுரத்தில் உலக கை கழுவும் தின விழா நடைபெற்றது.

Update: 2022-10-18 18:45 GMT

கிருஷ்ணகிரி அடுத்த ஜாகீர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக கை கழுவும் தின விழா மற்றும் இளைஞர் எழுச்சி நாள் விழா நடந்தது. பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) விஜய் தலைமை தாங்கினார். ஆசிரியை வெண்ணிலா வரவேற்றார். இதில், மாணவர்களுக்கு தன் சுத்தம், சுகாதாரம் பேணுதல், பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தில் இருந்து குப்பையை அகற்றி சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம், பிளாஸ்டிக் இல்லா உலகம் படைத்தல், நீர் தேங்குவதை தடுத்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்தல் குறித்து தலைமை ஆசிரியர் அறிவுரை வழங்கினார்.

மாணவர்கள் கை கழுவ வேண்டியதின் அவசியம் மற்றும் முறைகள் குறித்து அறிவியல் ஆசிரியர் சங்கர், செயல் விளக்கம் அளித்தார். தூய்மை இந்தியா குறித்து தலைமை ஆசிரியர் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்