வாலிபருக்கு அரிவாள் வெட்டு

வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2022-08-27 17:34 GMT

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் நாலாம்சேத்தி, கீழகுடியான தெருவை சேர்ந்த அர்ஜூனன் மகன் விக்னேஷ் (வயது28). இவர் கூத்தாநல்லூர் அருகே உள்ள திருநாட்டியத்தான்குடியில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது அங்கு சேந்தங்குடி பொய்கைநல்லூர், கீழத்தெருவை சேர்ந்த புதுமைராஜ் மகன் சேசுராஜ் (30) என்பவர் தூங்கி கொண்டிருந்தார். அவரை விக்னேஷ் எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த சேசுராஜ், அங்கு இருந்த அரிவாளை எடுத்து விக்னேசை வெட்டினார். இதில், பலத்த காயம் அடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேசுராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்