காரில் குட்கா கடத்தியவர் கைது

காரில் குட்கா கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-12-20 20:22 GMT

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புகாரனேந்தல் சாலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 628 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து குட்கா கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா சின்னட்டி கிராமத்தை சேர்ந்த அம்பரீஷ் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த குட்காவை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்கு கடத்தி வந்தது தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்