வாலாஜாவில் ரூ.1½ லட்சம் குட்கா பறிமுதல்

வாலாஜாவில் ரூ.1½ லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-14 15:50 GMT

வாலாஜா

வாலாஜாவில் ரூ.1½ லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

வாலாஜா அருகே உள்ள சென்னை-பெங்களூரு சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சென்னை நோக்கி வந்த காரை போலீசார் சோதனையிட்டனர். அதில் 15 மூட்டைகளில் 150 கிலோ ஹான்ஸ் புகையிலை, குட்கா இருந்தன. இவை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்திச்செல்லப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் பாலிமார் மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவரான கோபால்சிங் மகன் மகாவீர் சிங் (வயது 24), ராஜஸ்தான் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த ராம்சோடா மகன் சந்திரராம் (23) ஆகியோரை கைது செய்து காருடன் குட்கா, ான்ஸ் புகையிலையை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்