கூடலூர் அணி வெற்றி

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் கூடலூர் அணி வெற்றி பெற்றது.

Update: 2023-05-31 23:30 GMT

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஊட்டி மற்றும் கோத்தகிரியில் நடந்து வருகிறது. இதில் சங்கத்தில் ஏ, பி மற்றும் சி டிவிஷன் பிரிவில் பதிவு செய்துள்ள 30 அணிகளில் 21 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடந்த போட்டியில் கூடலூர் அணியும், குன்னூர் டான் பிராட்மேன் அணியும் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குன்னூர் டான் பிராட்மேன் அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர் தினேஷ் 33 ரன்கள் எடுத்தார். கூடலூர் அணியின் பந்து வீச்சாளர் அன்வர் ரகுமான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து 108 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கூடலூர் அணி 11.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷினோஜ் 86 ரன்கள், முரளி 26 ரன்கள் எடுத்தனர். கூடலூர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

மேலும் செய்திகள்