மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா

பண்டாரபுரத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.;

Update:2022-08-18 21:17 IST

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் ஒன்றியம் பண்டாரபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.18லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு பண்டாரபுரம் ஊராட்சித் தலைவர் பாலசிங் தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் ஜெயபதி, ஒன்றிய ஆணையாளர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேகர குருவானவர் சாமுவேல் ஆரம்ப ஜெபம் நடத்தினார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது எம்.எல.்ஏ.விடம் யூனியன் சேர்மன் ஜெபபதி, புதுக்குளத்தில் குடிநீர் தொட்டி, பயணிகள்் நிழற்குடை கேட்டு மனு அளித்தார். மனுவை பெற்ற எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும், காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா, 75-வது சுதந்திர தின பவள விழா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு ஏரலில் நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஊர்வசி அமிர்தராஜ் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சிரஞ்சீவி முன்னிலை வகிக்கிறார். இதில் பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம்தாகூர் கலந்து கொண்டு விழா நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், தலைமை நிலைய பேச்சாளர் பால்துரை உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றன. தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சங்கர் நன்றி கூறுகிறார். இந்த விழாவில் வட்டார, நகர, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளனோர் வந்து கலந்து கொள்ள வேண்டும் என ஊர்வசி அமிர்தராஜ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்